Tuesday, September 11, 2007

பாகற்காய் வறுவல்

இன்றைய தினசரியில் படித்த செய்தி ஒன்று.கசப்பான செய்தி;படித்தவுடன் அந்தக் கசப்புடன் நம்மைக் காரமாக்கும் செய்தி.மத்திய அமைச்சர் சங்கர் சிங் வகேலா அவர்கள் விதர்பா விவசாயிகளின் தற்கொலை பற்றிக் கிண்டல் செய்திருக்கிறார்.அவர்கள் சோம்பேறிகளாம்;அவர்கள் தற்கொலைக்கு அவர்களேதான் காரணமாம்.
வறுமையில் வாடி தற்கொலை செய்து கொண்ட ஏழை விவசாயிகள் பற்றி ஒரு பொறுப்புள்ள அமைச்சர் பேசும் பேச்சா இது.பேசுவார்.ஏனென்றால் இறந்தவர்களுக்கு வாக்கு இல்லையே.அவர்களைப் பற்றி என்ன கவலை?
வேறெந்த நாட்டிலும் பொறுப்பான பதவி வகிப்பவர்கள் இவ்வாறு பேச மாட்டார்கள். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மட்டுமே இது சாத்தியம்.
இந்த நாட்டு மக்கள் சிந்தித்து வாக்களிக்காத வரை,ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஏமாளியாகத்தயாராக இருக்கும் வரை,திறமையற்ற ஊழல்பேர்வழிகளைத்தூக்கி எறியத்தயாராகாதவரை இது தொடரும்.
the people get the government they deserve.
"மேரா பாரத் மஹான்"

No comments: