Tuesday, September 11, 2007

ரவா கேசரி,மிக்சர்

சென்னை ராயப்பேட்டை மருத்துவ மனையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், அமிலம் குடித்துத் தற்கொலைக்கு முயன்ற ஒரு பையனின் வெந்து போன உணவுக்குழாயை அறுவைச் சிகிச்சை மூலம் சீரமைத்து, ஒரு புது வாழ்க்கையை அளித்திருக்கிறார்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அப் பையனின் தந்தை அது போலவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன் வந்திருக்கிறார்.

நல்ல உள்ளத்திற்கு நன்றி.அபாரமாக முன்னேறி வரும் மருத்துவத்துறைக்கு வாழ்த்துக்கள்.

இந்த முன்னேற்றத்தின் பயன் இந்த நாட்டின் கடைசிக் குடி மகனுக்கும் கிடைக்கிறதா?சுதந்திரம் வாங்கி 60 ஆண்டுகள் ஆன பின்னும் ஏழை இந்தியனின் நிலை என்ன?"தனியொருவனுக்குணவிலையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்" என்றான் பாரதி.குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவாவது அனைவருக்கும் கிடைக்க வழி செய்ய வேண்டாமா?

வெறும் வாக்குறுதிகள் சோறு போடுமா?

2 comments:

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

ஐயா,திருமந்திரம் பற்றி எழுதி வந்தீர்களே,அது இந்த வலைத் திட்டுதானா???

மதுரை சொக்கன் said...

அறிவன் அய்யா அவர்களே
என்னை நினைவில் வைத்திருப்பதற்கு நன்றி.திருமந்திரம் பற்றிய பதிவு"http://www.shravanan.blogspot.com".அதில் அடுத்த இடுகை விரைவில் வரும்.
நன்றி