Wednesday, September 12, 2007

வடை கறி

சில நாட்களுக்கு முன் பத்திரிகையில் படித்த செய்திஒன்று.(D.C.8,sep 2007)தமிழ்,தெலுங்குஇரண்டு மொழித் திரைப்படங்களிலும் பிரபலமான ஒரு நடிகை சென்னை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஒரு அரசியல் பிரமுகரின் உடன் பிறப்புடன் உல்லாசமாக இருந்த போது காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.அதே ஓட்டல் அறையொன்றில் ஒரு மணி நேரம் காவலில் வைக்கப்பட்டுப் பின் விடுவிக்கப்பட்டார்.காரணம்,உயர் அதிகாரியின் உத்தரவு மற்றும் அரசியல் பிரபலத்தின் குறுக்கீடு.கொழுப்பேறி,அரிப்பெடுத்து மேலும் வசதியைப்பெருக்கிகொள்ள ஒரு உயர் மட்ட நடிகை தவறு செய்தால் மன்னிக்கப் படுகிறாள்.சட்டத்தின் கைகள் கட்டப்படுகின்றன.ஆனால் வறுமை காரணமாக,வயிற்றுச்சோற்றுக்காக ஒருத்தி தவறு செய்தால் அவளை காப்பற்ற யார் வருவார்





புதுமைப்பித்தனின்சிறுகதை ஒன்று நினைவுக்கு வருகிறது.உடல் நிலை சரியில்லாத கணவனுக்காக உடலை விற்கும் ஒரு பெண்.





"அம்மாளுவும் அவனும் இருளில் சென்று மறைந்தனர்.அம்மாளுவுக்கு அன்று முக்கால் ரூபாய் வருமானம்.புருஷனுக்குப் பால் கஞ்சி வார்க்கத்தான். கற்பு,கற்பு என்று கதைக்கிறீர்களே!

இதுதான் அய்யா பொன்னகரம்"


இவ்வாறு கதை முடியும்.


இந்தக்கதையையும் நடிகை சம்பந்தப்பட்ட நிஜ நிகழ்வையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

கதையில் வரும் பெண்ணைக் காவல் துறை பார்த்திருந்தால் அவள் கைது செய்யப்பட்டிருப்பாள்.புருஷன் உணவின்றி மேலும் நலிந்திருப்பான். ஆனால் இங்கோ?

இதுதான் அய்யா நிஜம்

2 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நீங்கள் கூறும் செய்தியின் உண்மை பற்றித் தெரியாது.ஆனால் நம் நாடுகளில் பணம்,பதவி,பவுசு இருந்தால் எல்லாம் வாலாட்டும்.
சங்கராச்சாரியாருக்கு சிறையில் தனிச் சமையல் அதுவும் இன்னுமொரு பிராமணரால்...குப்பனுக்கும், சுப்பனுக்கும் இச் சலுகை கிட்டுமா??
எனவே என்ன? வழியிலும் காசைச் சம்பாதித்தால் எல்லோரும் கைகட்டி சலாம் போடுவார்கள்.
மீன் விற்ற காசு நாறாது...சொல்லிடாங்களல்லா...
காசைத் தேடுங்க...சலுகை தானே வரும்...

மதுரை சொக்கன் said...

சரியாகச்சொன்னீர்கள்,யோகன் பாரிஸ்.'காசேதான் கடவுளடா-இல்லையில்லை,கடவுளுக்கும் மேலடா '
நன்றி