Thursday, August 13, 2009

காவிரி நீர் சாணக்கியம்!

இனித் தமிழ் நாட்டு விவசாயிகளுக்குக் கவலையில்லை!மூன்று போகம் விளைச்சலைப் பார்க்கலாம்!காவிரி நீர் பெருக்கெடுத்து ஓடி தமிழ்நாடு செழிக்கப்போகிறது!தமிழ்நாட்டுக்கு வேண்டிய காவிரி நீரைக் கர்நாடகா அரசு தடையின்றித் தரப் போகிறது!அது மட்டுமா?ஹொகேனக்கல் திட்டம் நிறைவேறி தர்மபுரி,கிருஷ்ணகிரி மாவட்டங்கள் மகிழ்ச்சியில் திளைக்கப் போகின்றன.எவ்வளவு எளிதாக பிரச்சனை முடிந்து விட்டது?என்ன ராஜ தந்திரம்?என்ன அரசியல் சாணக்கியம்?இது தெரியாமல் இத்தனை நாட்களாக காவிரி நீர் ஆணையம்,உச்சநீதி மன்றம் என்றெல்லாம் ஆண்டுகள் வீணாக்கப் பட்டு விட்டனவே?
இதோ,கர்நாடகத்தில் வள்ளுவர் சிலையும்,பதிலுக்கு,தமிழ்நாட்டில்,சர்வக்ஞர் சிலையும் திறக்கப் பட்டு விட்டன.பிரச்சினைகள் தீர்ந்தன.
வெற்றி விழாக் கொண்டாட்டங்கள் தொடங்கட்டும்!புதிய பட்டங்கள் வழங்கப்படட்டும்! ஆகா!ஆகா!இதுவன்றோ வெற்றி?

தமிழர்,கன்னடிகா பாய்,பாய்!!(இந்தி,சீனி பாய் பாய் போல)

Friday, April 3, 2009

பிணத்துடன் உடலுறவு!?

இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்த செய்தி.
முப்பது வயதான ஒரு ஆண்,தன் மனைவியை உடலுறவுக்கு அழைத்து,அவள் மறுக்கவே,ஸ்கிப்பிங்க் கயிற்றால் அவள் கழுத்தை நெரித்துக் கொன்று விட்டு,உயிரற்ற அந்த உடலுடன் உறவு கொண்டுள்ளான்.
என்ன ஒரு வக்கிரம்?
மன நல மருத்துவர்கள் சொல்கிறார்கள் இது ஒரு விதமான மன நோய் என்று.அதற்கான ஆங்கிலப் பெயர்-'necrophilia'.

ஆனால் வள்ளுவர் இந்த விஷயத்தை ஒரு உவமையாக உபயோகப்படுத்தி,வேறு ஒரு செயலை இதனுடன் ஒப்பிடுகிறார்--

“பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ யற்று.”
பொருளையே விரும்பும்பொது மகளிரின் பொய்யான தழுவுதல்,இருட்டறையில், தொடர்பு இல்லாத ஒரு பிணத்தைத் தழுவினாற் போன்றது.

ரத்தினச் சுருக்கமாகப் பொட்டில் அறைந்தது போல் சொல்லி விட்டார் அல்லவா?

Saturday, February 14, 2009

குழந்தைக் காதல்!

13 வயதுத் தந்தை!
ஆம்.
8 வயதே ஆனவன் போலத் தோற்றமளிக்கும் ,13 வயதான ஒரு பிரிட்டிஷ் சிறுவன் ஒரு பெண் குழந்தைக்குத் தந்தையாகியிருக்கிறான்.
உண்மை!நம்பமுடியாத உண்மை.
அச்சிறுவனும் 15 வயதான அவன் சினேகிதியும் ஓராண்டுக்கு முன் ஓரிரவு பாதுகாப்பில்லாத உடலுறவு கொண்டதன் விளைவாக நான்கு நாட்களுக்கு முன்,அப்பெண், ஒரு பெண் குழந்தைக்குத் தாயாகியிருக்கிறாள்!
அவள் கர்ப்பம் எனத்தெரிந்ததும் கருச்சிதைவு செய்து கொள்வதில் அந்தச் சிறுவனுக்கு உடன் பாடில்லையாம்!

அச் சிறுவனின் தந்தை சொன்னது-”அவன் வீட்டில் அமர்ந்து அலட்சியமாகக் கணினியில் விளையாடிக் கொண்டிருந்திருக்கலாம்..ஆனால்,அவன் தினமும் மருத்துவ மனைக்குச் சென்று பார்த்துக் கொண்டிருந்தான்!”

பதின்மூன்றே வயதில் எவ்வளவு பொறுப்பான ஒருகாதலன்!தந்தை!

காதல் வாழ்க!